40 டிரில்லியன் டொலரை கடந்த அமெரிக்கா கடன் - டிரம்ப் ஆட்சியில் 2 மடங்கு உயர்வு
us debt crosses 40 trillion debt: அமெரிக்காவின் கடன் முதல்முறையாக 40 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது.
40 டிரில்லியன் டொலரை கடந்த அமெரிக்கா கடன்
அமெரிக்காவிற்கு உள்ள கடன்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா கருவூலத் துறை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் முதன்முதலில் பதவியேற்ற கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் கடன் 19.95 டிரில்லியன் டொலராக இருந்தது.

தற்போது இந்த கடன்தொகை இரட்டிப்பாகி 40.047 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த கடன் தொகையில் 32.266 டிரில்லியன் டொலர் பொதுக் கடனாகவும்,7.782 டிரில்லியன் டொலர் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 39 டிரில்லியன் டொலராக இருந்த கடன், அடுத்த 5 மாதங்களில் ஒரு டிரில்லியன் டொலர் உயர்ந்து 40.047 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
கொரோனா கால நிவாரணங்களுக்காக பெருமளவில் கடன் வாங்கப்பட்டது. ராணுவ செலவுகள், மூத்த குடிமக்களுக்கான சமூக பாதுகாப்பு, சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகளவில் கடன் வாங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவில் தனிநபர் கடன் சுமார் 1,17,000 டொலராக உள்ளது. கடன் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, சாமானிய மக்களின் வீட்டு வாடகை உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |