லண்டனில் இருந்து சரக்கு விமானத்தில் ரகசியமாக வெளியேற்றப்பட்ட அமெரிக்க தூதர்: அவரின் பின்னணி
US diplomat smuggled out of UK on cargo plane: சரக்கு விமானம் மூலம் அமெரிக்க தூதர் ஒருவர் பிரித்தானியாவிருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டார்.
லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய சிறார் துஸ்பிரயோகக் குற்றவாளி ஒருவரை, அமெரிக்க உளவுத்துறையினர் பிடித்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
குறித்த சம்பவம் பிரித்தானிய பொலிசாருக்குத் தெரிவிக்காமலேயே ரகசியமாக நடந்துள்ளது. மட்டுமின்றி, அமெரிக்காவில் வசிக்கும் அவரது சகோதரர் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளால் அந்த ரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தெற்கு லண்டனின் நைன் எல்ம்ஸில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரரான தூதருக்கு, அவரது சகோதரர் துஸ்பிரயோகத் தரவுகளை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 25 அன்று புட்னியில் உள்ள அந்தத் தூதரின் குடியிருப்பிற்குள் அதிரடியாக நுழைவதற்கு முன்னதாக, அதிகாரிகள் அமெரிக்காவில் நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது.
அவர்கள் அந்த குடியிருப்பில் சிறார்களைத் துன்புறுத்தும் வகையிலான படங்களைக் கண்டெடுத்துள்ளனர்; மேலும், பிரித்தானியாவில் கைது செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாதபோதிலும் அந்த நபரைப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 24 அன்று, அமெரிக்க விமானப்படைக்கு முக்கிய தளம் அமைந்துள்ள குளோசெஸ்டர்ஷையரின் (Gloucs) RAF ஃபேர்ஃபோர்டுக்கு, சிகாகோவிலிருந்து போயிங் 747-4R7F ரக விமானம் ஒன்று வந்தத்தை விமானப் பயணத் தரவுகள் காட்டுகின்றன.
ஆகஸ்ட் 25 அன்று, அதே விமானம் மாலை 5:33 மணிக்கு ஃபேர்ஃபோர்டிலிருந்து புறப்பட்டு, 7 மணி 11 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, உள்ளூர் நேரப்படி மாலை 7:44 மணிக்கு டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்தை வந்தடைந்தது.
அதே விமானம் அங்கிருந்து இரவு 11:22 மணிக்குக் கிளம்பி, ஒரு மணி நேரம் 38 நிமிடப் பயணத்திற்குப் பிறகு இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் உள்ள ஓ'ஹேர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அது ஒரு சரக்கு விமானம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 25-க்கு முந்தைய குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஃபேர்ஃபோர்டுக்குப் பயணம் செய்திருக்கவில்லை என்றே தெரிய வருகிறது.
அந்த தூதர் ரகரியமாக வெளியேற்றப்பட்ட பின்னரே, பெருநகர காவல்துறைக்கும் பிற பிரித்தானிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பிரித்தானிய-அமெரிக்க உறவுகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், உண்மையை மூடிமறைத்ததாகக் குற்றச்சாட்டுகளைத் தூண்டியுள்ளது.
உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கும் ஸ்காட்லாண்ட் யார்டுக்கும் இடையே நெருக்கடியான கூட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளது.