கமலா ஹரிஸா, ட்ரம்பா? சுவிஸ் மக்கள் ஆதரவு யாருக்கு?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சுவிஸ் மக்கள் ஆதரவு கமலா ஹரிஸுக்கா அல்லது ட்ரம்புக்கா என்பதை அறிவதற்காக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
சுவிஸ் மக்கள் ஆதரவு யாருக்கு?
திங்கட்கிழமை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், சுவிஸ் மக்களில் 61 சதவிகிதம் பேரின் ஆதரவு கமலா ஹரிஸுக்குதான் என தெரியவந்துள்ளது.
25 சதவிகிதம் பேர் மட்டுமே ட்ரம்புக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். மேற்கு ஐரோப்பாவைப் பொருத்தவரை, பிரித்தானியா மற்றும் கிரீஸ் நாடுகளில்தான் கமலா ஹரிஸைவிட ட்ரம்புக்கு கூடுதல் ஆதரவு உள்ளது.
அதே நேரத்தில், ட்ரம்ப் வெற்றி பெற்றால், உலக அரங்கில் அமெரிக்காவின் இமேஜ் மேம்படுமா என ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
பொதுவாக, ஐரோப்பிய அளவில், 19 சதவிகிதம் மக்கள் ட்ரம்ப் வெற்றி பெற்றால், உலக அரங்கில் அமெரிக்காவின் இமேஜ் மேம்படும் என்று கூறியுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் 16 சதவிகிதம் பேர் ட்ரம்ப் வெற்றி பெற்றால், உலக அரங்கில் அமெரிக்காவின் இமேஜ் மேம்படும் என்றும், 59 சதவிகிதம் பேர், இல்லை, ட்ரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் பெயர் கெட்டுப்போகும் என்றும் கூறியுள்ளார்கள்.