நாளை அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்... கமலா ஹரிஸா, ட்ரம்பா? சமீபத்திய கருத்துக்கணிப்புகள்
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், சமீபத்திய கருத்துக்கணிப்புகள் சிலவற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கமலா ஹரிஸா, ட்ரம்பா?
நேற்று, ஞாயிற்றுக்கிழமை வெளியான Morning Call/Muhlenberg College poll என்னும் கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள், கமலா ஹரிஸ் முந்துவதாக தெரிவித்துள்ளன.
விடயம் என்னவென்றால், அவருக்கும் ட்ரம்புக்கும் இடையில் ஒரு புள்ளி அல்லது அதற்கும் குறைவான அளவிலேயே வித்தியாசம் காணப்படுகிறது.
அதே நேரத்தில், FiveThirtyEight என்னும் மற்றொரு கருத்துக்கணிப்பில், சில இடங்களில் கமலாவும், சில இடங்களில் ட்ரம்பும் மாறி மாறி முன்னிலை வகித்தாலும், அதிலும் இருவருக்குமிடையே சிறு வித்தியாசமே காணப்படுகிறது.
வட கரோலினாவில், ட்ரம்புக்கு 48.4 சதவிகிதமும், கமலாவுக்கு 47.2 சதவிகிதமும் ஆதரவு உள்ளது.
அரிசோனாவில், ட்ரம்புக்கு 49 சதவிகிதமும் கமலாவுக்கு 46. சதவிகிதமும், மிச்சிகனில், ட்ரம்புக்கு 47.1 சதவிகிதமும், கமலாவுக்கு 47.9 சதவிகித ஆதரவும் உள்ளது.
பெனிசில்வேனியாவில், ட்ரம்புக்கு 47.9 சதவிகிதம், கமலாவுக்கு 47.8 சதவிகிதமும், நெவாடாவில் ட்ரம்புக்கு 47.8 சதவிகிதமும் கமலாவுக்கு 47. 4 சதவிகிதமும் ஆதரவு உள்ளது.
ஜார்ஜியாவில், ட்ரம்புக்கு 48.5 சதவிகிதம், கமலாவுக்கு 47.2 சதவிகிதமும், விஸ்கான்சினில் ட்ரம்புக்கு 47.3 சதவிகிதமும் கமலாவுக்கு 48.2 சதவிகிதமும் ஆதரவு உள்ளது.
முக்கிய விடயம் என்னவென்றால், வாக்கெடுப்பில் கலந்துகொண்ட வாக்காளர்களில் 2 சதவிகிதம் பேர், தாங்கள் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளதால், தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |