அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கமலா ஹரிஸ் வெற்றி பெற இன்னமும் வாய்ப்புள்ளதா?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமலா ஹரிஸை ட்ரம்ப் முந்துவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
கமலா ஹரிஸ் வெற்றி பெற இன்னமும் வாய்ப்புள்ளதா?
ஆனாலும், கமலா ஹரிஸ் வெற்றி பெற இன்னும் வாய்ப்பு இருப்பதாக சில செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்க தேர்தல் முறை, பல நாடுகளின் தேர்தல் முறைகளிலிருந்து மாறுபட்ட ஒன்றாகும். அதில், ஒரு ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற இத்தனை இருக்கைகள் தேவை என்று சொல்லாமல், இத்தனை எலக்டோரல் வாக்குகள் தேவை என்று சொல்வார்கள்.
ஆக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், மொத்த 538 எலக்டோரல் வாக்குகளில், குறைந்தது 270 வாக்குகளை பெறவேண்டும்.
இந்நிலையில், சமீபத்திய நிலவரப்படி ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
ஆனாலும், அரசியல் வல்லுநர்கள் கமலா ஹரிஸ் வெற்றி பெற இன்னமும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள்.
அதாவது, மிச்சிகன், பெனிசில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் யார் வெற்றி பெறுகிறார் என்பது, யார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்பதை தீர்மானிக்கும் விடயமாக இருக்குமாம்.
Big picture: Given the counties reporting so far in WI, MI, PA, and AZ...and the counties (mostly urban areas/suburbs) lagging/still to report, Harris is in good shape to win those four swing states and finish with 281 EV. Losing GA + NC would be irrelevant. #election2024
— David Shuster (@DavidShuster) November 6, 2024
இந்நிலையில், பிரபல ஊடகவியலாளரான David Shuster என்பவர், இந்த மூன்று மாகாணங்கள், மீதமுள்ள நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் வாக்குகள் கமலா ஹரிஸ் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்கிறார்.
ஆக, தற்போதைய நிலையே நீடித்தால், கமலா ஹரிஸால் 281 எலக்டோரல் வாக்குகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளார் David Shuster.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |