அமெரிக்க ஆட்சியை மீண்டும் பிடித்த டிரம்ப் - இந்தியா சந்திக்க போகும் சிக்கல் என்ன?
அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வாகியிருக்கும் நிலையில், அமெரிக்க - இந்திய உறவில் ஏற்படும் தாக்கம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்தியா சந்திக்க போகும் சிக்கல் என்ன?
தனது தேர்தல் பரப்புரையின் போதே அமெரிக்காவிற்குத் தான் முன்னுரிமை என்ற முழக்கத்தை டொனால்ட் டிரம்ப் முன்வைத்தார்.
அந்தவகையில் அமெரிக்கப் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது டிரம்ப் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஊற்றுமதி செய்யும் சில நிறுவனங்கள் தாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் எச்1 பி விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் ட்ரம்ப் தலைமையிலான அரசு செய்யும் என் கூறப்படுகிறது.
இது இந்தியர்களை பெருமளவில் பாதிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
குடியுரிமைச் சட்டத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டால், கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு இந்தியாவைக் கனடா குற்றம்சாட்டி வரும் பிரச்சினையில் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டது.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பது இந்தியாவிற்குச் சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |