ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி: பதற்றமடைந்துள்ள இளவரசர் ஹரி மேகன் தம்பதி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது வெற்றியால் இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் பதற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பதற்றமடைந்துள்ள இளவரசர் ஹரி மேகன் தம்பதி
ராஜ குடும்பத்தைப் பிரிந்து, பிரித்தானியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் குடியமர்ந்தார்கள் ஹரி, மேகன் தம்பதியர்.
ஆனால், கடந்த அமெரிக்க தேர்தலின்போது அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள், ட்ரம்புக்கு எதிரானவையாக கருதப்பட்டன. அப்போது, ட்ரம்பும் ஹரி, மேகன் தம்பதியரை விமர்சித்திருந்தார்.
அத்துடன், அமெரிக்க விசா பெறும் விடயத்தில், போதைப்பொருட்கள் பயன்படுத்திய பிரச்சினை ஒன்றில் ஹரி பொய் சொன்னதாக எழுந்த விவகாரம் குறித்து விமர்சித்திருந்த ட்ரம்ப், தான் ஜனாதிபதியானால், ஹரி நாடுகடத்தப்படலாம் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டதால், ட்ரம்ப் தரப்பிலிருந்து ஹரி மேகன் தம்பதியருக்கு தொல்லை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, ராஜ குடும்பத்தையும் பிரித்தானியாவையும் விட்டு வெளியேறிவிட்ட நிலையில், தற்போது ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், அமெரிக்காவில் தங்கள் எதிர்காலம் குறித்து ஹரி மேகன் தம்பதியர் மிகவும் பதற்றமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |