உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோம்... தன் குடிமக்களுக்கு அமெரிக்காவின் செய்தி
இஸ்ரேலிலிருக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு உதவமுடியாத நிலையில் இருப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோம்
இஸ்ரேலிலிருக்கும் அமெரிக்கக் குடிமக்களை இப்போதைக்கு அங்கிருந்து வெளியேற்ற இயலாத நிலையில் இருப்பதாக இஸ்ரேலிலிருக்கும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இஸ்ரேலிலிருந்து வெளியேற முயற்சிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு நேரடியாக உதவ இயலாது என்றும், அவர்கள் தாங்களே தங்கள் பாதுகாப்புக்கான திட்டங்களை வகுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
The U.S. Embassy is not in a position at this time to evacuate or directly assist Americans in departing Israel.
— U.S. Embassy Jerusalem (@usembassyjlm) March 3, 2026
The following is provided for your information as you make your own security plans.
The Israeli Ministry of Tourism has begun operating shuttles to the Taba… pic.twitter.com/E6a5z0mE58
இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்நாடுகளிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
The @SecRubio @StateDept urges Americans to DEPART NOW from the countries below using available commercial transportation, due to serious safety risks. Americans who need State Department assistance arranging to depart via commercial means, CALL US 24/7 at +1-202-501-4444 (from… pic.twitter.com/vdplAik2Sq
— Assistant Secretary Mora Namdar (@AsstSecStateCA) March 2, 2026
அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ள நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்: பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல் மாற்றும் பாலஸ்தீனிய பிராந்தியங்கள், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமான் ஆகிய நாடுகள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |