"இலங்கையில் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்" - அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை!
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்...
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், அறுகம்பை கடற்கரைப் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை அறுகம்பை கடற்கரை பகுதியை தவிர்க்குமாறு தனது குடிமக்களை கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
"இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் அறுகம்பேக்கான தூதரக பணியாளர்களுக்கு உடனடியாக மறு அறிவிப்பு வரும் வரை பயணக் கட்டுப்பாட்டை விதித்தது."
அமெரிக்கப் பிரஜைகள் குறித்த பகுதியில் ஏதேனும் நெருக்கடிகளை சந்தித்தால் உடனடியாக 119 மூலம் உள்ளூர் அதிகாரிகளுக்கு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்தப் பகுதிக்குச் செல்வோர் தகவல்தொடர்பு சாதனங்களை இலகுவில் பயன்படுத்தக் கூடிய வகையில் வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |