அனுரவுடன் அமெரிக்கத் தூதுவர் திடீர் சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று (மே 14) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாடு எதிர்கொண்டுள்ள மிக அவசரமான சவால்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) கட்சி ஆதரவு தராது என அக்கட்சித்த தலைவர் அனுர குமார திசாநாயக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க சந்திப்பு நடந்துள்ளது.
இலங்கை எம்.பி மரணம் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!
இந்த சந்திப்பு குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பொருளாதார நெருக்கடிக்கு நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை தாம் தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.
அந்த வகையில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்கள் குறித்து கலந்துயைாட அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தேன் என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் மற்றும் ஜே.வி.பி.யின் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.