ட்ரம்ப் கோல்ஃப் ரிசார்ட்டில் வான்வழி ஊடுருவல்: அதிரடியாக செயல்பட்ட F-16 போர் விமானம்
ட்ரம்பின் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியான கோல்ஃப் ரிசார்ட்டின் வான்வழியில் விமானமொன்று ஊடுருவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள தனது கோல்ஃப் ரிசார்ட்டில் விடுமுறையை கழித்து வந்த சமயத்தில், தடை விதிக்கப்பட்ட அந்த இடத்தின் வான்வழிக்குள் ஒரு அனுமதி இல்லாத விமானம் நுழைந்தது.
இதனால் அமெரிக்கா-கனடா கூட்டு பாதுகாப்பு அமைப்பான NORAD உடனடியாக F-16 போர் விமானத்தை அனுப்பி அந்த விமானத்தை வெளியே தள்ளியது.
இந்தச் சம்பவம், சமீப காலங்களில் பெட்மின்ஸ்டர் வான்வழிக்குள் ஐந்தாவது முறையாக அனுமதி இல்லாத விமானம் நுழையும் சம்பவமாகும்.
NORAD விளக்கம்:
சனிக்கிழமை பிற்பகல் 2.39 மணியளவில் இந்த ஊடுருவல் நடந்ததாக NORAD தெரிவித்துள்ளது.
"ஒரு பொதுவான பயணிகள் விமானம் TFR (Temporary Flight Restriction) பகுதியில் நுழைந்ததால், F-16 விமானம் headbutt maneuver எனப்படும் கவன ஈர்ப்பு முறைமையை பயன்படுத்தி அதனை வெளியே அனுப்பியது," எனக் கூறியுள்ளது.
NORAD intercepted a plane violating a Temporary Flight Restriction (TFR) over Bedminster, NJ on July 5, 2025. Pilots, a reminder to check FAA NOTAMs before you fly! ➡️ https://t.co/gCkz8RJmkY Fly informed. Fly safe. #NORAD #AviationSafety https://t.co/5wJvXXnbTA
— North American Aerospace Defense Command (@NORADCommand) July 5, 2025
FAA வெளியிடும் NOTAM (Notice to Air Missions) வழிகாட்டல்களை விமானிகள் அவசியமாக பின்பற்ற வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான ஊடுருவல்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் NORAD வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு அமைப்புகள் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump airspace breach, F-16 intercept Bedminster, NORAD headbutt maneuver, Trump July 5 incident, TFR violation New Jersey, FAA NOTAM warning, Trump golf course flyover, Fighter jet civilian plane, White House no-fly zone, NORAD response Trump