ஜேர்மனியில் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் F-16 ரக போர் விமானம்: பைலட்டின் கடைசி நிமிட முடிவு
US F-16 Fighter Jet Crashes In Germany: ஜேர்மனியில் விமான தளம் அருகே அமெரிக்காவின் F-16 ரக போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான F-16 ரக போர் விமானம்
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஜேர்மனியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்பாங்டாலேம்(Spangdahlem) அமெரிக்க விமானப்படை தளத்திற்கு அருகே F-16 பால்கன் ரக போர் விமானம்(F-16 Fighting Falcon) எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தானது மதியம் 2.30 மணியளவில் நடந்த நிலையில், விபத்துக்கு முன்னதாக அதன் பைலட் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேறியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர் தற்போது மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபெல்(Eifel) கிராமத்தை சேர்ந்த உள்ளூர் அதிகாரிகளின் தகவல் படி, இந்த விமான விபத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைந்த மீட்புக்குழுவினர்
போர் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து Bitburg-Prüm மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.