ட்ரம்ப்பின் வரவால் வட்டி குறைப்பு நிறுத்தம்: பெடரல் ரிசர்வ் அறிவிப்பு
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், வட்டி விகிதக் குறைப்புகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பணவீக்கம்
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவாகவும், நிலையாகவும் உள்ளதால் வட்டி விகித குறைப்பை நிறுத்தியுள்ளதாக வங்கி கூறியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், பணவீக்கம் அதன் இலக்கான 2 சதவீதத்தை விட சிறிய அளவில்தான் அதிகமாக உள்ளது என்பதை கருத்தில்கொண்டு வட்டி விகித குறைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
வட்டி குறைப்புகள் அமுல்
2024 முழுவதும் தொடர்ச்சியான வட்டி குறைப்புகள் அமுல்படுத்தப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்கள் 4.25 சதவீதம் முதல் 4.5 சதவீதம் வரையிலான வரம்பிற்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது நாணய கொள்கைக் கூட்டத்தின் முடிவில், இனி வரும் மாதங்களில் நாணயக் கொள்கையில் கவனமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும் என்பதை இந்த அறிவிப்பு மூலம் முதலீட்டாளர்களுக்கும், மக்களுக்கும் பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.
அத்துடன் வட்டி விகிதங்களில் அடுத்து ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன், முக்கிய காரணிகளை தீவிரமாக கண்காணித்து தடுமாற்றங்களை கடந்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |