லண்டனை நடுங்க வைத்த அமெரிக்க போர் விமானங்கள்! கமெராவில் சிக்கிய காட்சி
பிரித்தானியா தலைநகர் லண்டன் வான்வெளியில் பயங்கர சத்தத்துடன் போர் விமானங்கள் பறந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு முன்பு வடக்கு லண்டன் மற்றும் எசெக்ஸ் பகுதிகளில் திடீரென பயங்கரமாக வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அதேசமயம், பலர் வான்வெளியில் போர் விமானங்கள் பறந்ததை பார்த்துள்ளனர்.
லண்டன் வான்வெளியில் குறைவான உயரத்தில் போர் விமானங்கள் பறந்துச்சென்றதால் பயங்கர சத்தம் கேட்டதுமட்டுமில்லாமல், வீடுகளும் அதிர்ந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே சுமார் நான்கு போர் விமானங்கள் பறந்து சென்றதாக நேரில் பார்த்த உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் வான்வெளியில் போர் விமானங்கள் பறந்துச்சென்றதை பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சம் உறுதிப்படுத்தியுள்ளது.
Another video of the fighter jets above North London, and more importantly the noise!
— Lucinda (@Lucindavs) October 6, 2021
…forgot you can save Live Photos as video pic.twitter.com/KQbm30EnU0
லண்டன் வான்வெளியில் அமெரிக்காவின் F15 ரக போர் விமானங்கள் பறந்துச்சென்றது.
விமானங்கள் RAF லேகன்ஹீத்திலிருந்து வந்ததை உறுதிசெய்த பாதுகாப்பு அமைச்சகம், காலை 9 மணியளவில் RAF மில்டன்ஹாலில் இருந்து புறப்பட்டதாக தெரிவித்துள்ளது.