அமெரிக்காவில் ஹிந்து கலாச்சாரத்தை பின்பற்றிய குடும்பம் - அடுத்து நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்
வீட்டில் ஹோமம் வளர்த்ததால் தீயணைப்பு வாகனங்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள்
வழக்கமாக ஹிந்துக்கள் ஒரு வீட்டில் புதிதாக குடியேறும் போது, புதுமனை புகுவிழா நடத்துவது வழக்கம்.
இந்த நிகழ்வின் போது, சில பொருட்களை எரித்து ஹோமம் வளர்க்கப்படும். அதில், பெருமளவிலான புகை எழும்பும்.
இந்நிலையில், அமெரிக்காவில் இது போன்று இந்திய குடும்பம் செய்த செயல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய குடும்பம் ஒன்று, புதுமனை புகுவிழா நடத்தி அதில் ஹோமம் வளர்த்துள்ளது.
அதன் காரணமாக வெளிவரும் புகையை கண்ட அக்கம்பக்கத்தினர், தீ விபத்து என நினைத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விமர்சனம்
உடனடியாக தீயணைப்பு துறையினர், தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
A group of Indians were worshipping the Hindu fire god in Texas, and the neighbors call the fire fighters on them. pic.twitter.com/9mSBeJbVpn
— Papa Tiger (@BengaliFalcon71) August 4, 2025
அதன் பின்னர், விசாரணையின் ஒரு பகுதியாக தீயணைப்பு துறையினர் அந்த குடும்பத்தினருடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக அந்த குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்துள்ள பயனர்கள், "இது போன்ற கலாச்சாரத்தை விட முடியாது என்றால், ஏன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்" என்றும், "அவரவர் கலாச்சாரத்தை பின்பற்ற அவர்களுக்கு உரிமை உள்ளது" எனவும் கலவையான விமர்சனங்களை செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |