6 அமெரிக்க மாநிலங்களில் வெள்ளம்., மைனஸ் 60 டிகிரியில் போராடும் 90 மில்லியன் மக்கள்
அமெரிக்காவின் 6 மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டதில் 15 இறப்புகள் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி, ஜார்ஜியா, விர்ஜினியா, மேற்கு வர்ஜீனியா, டென்னசி மற்றும் இண்டியானா ஆகிய 6 மாநிலங்கள் வெள்ளத்தை எதிர்த்துப் போராடி வருகின்றன.
கடந்த ஆறு நாட்களில் 12 இறப்புகள் பதிவாகியுள்ள கென்டக்கி மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து மேற்கு வேர்ஜினியாவில் 2 இறப்புகளும், ஜோர்ஜியாவில் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் சுமார் 90 மில்லியன் மக்கள் துருவ சுழல் காரணமாக கடுமையான குளிரை எதிர்கொள்கின்றனர்.
இங்கு வெப்பநிலை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, குழாய்கள் வெடித்துள்ளன.
14,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றன, 17,000 இடங்களில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
மத்திய அமெரிக்கா தற்போது மிகக் குறைந்த வெப்பநிலையை அனுபவித்து வருகிறது என்று தேசிய வானிலை சேவையின் வானிலை ஆய்வாளர் ஆண்ட்ரூ ஓரிசன் கூறியுள்ளார்.
மத்திய மேற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில், வெப்பநிலை மைனஸ் 50 முதல் மைனஸ் 60 டிகிரியை எட்டியுள்ளது.
தொடர்ந்து உயர்ந்து வரும் நீர் மட்டம் காரணமாக பலர் காணாமல் போயுள்ளதாக மேற்கு வர்ஜீனியா கவர்னர் பேட்ரிக் மோரிஸ்ஸி கூறுயுள்ளார்.
கென்டக்கி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீட்புக் குழுக்கள் 1,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணிகளை நடத்தியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |