நாசா விண்வெளி நிறுவனத்திடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்கும் குடும்பம்
அமெரிக்காவில் விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA-விற்கு எதிராக ஒரு குடும்பம் வழக்கு பதிவு செய்துள்ளது.
புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் அக்குடும்பம் நாசாவிற்கு எதிராக 80,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.2.40 கோடி) கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
மார்ச் 8, 2021 அன்று, விண்வெளியில் இருந்து அவரது வீட்டின் மீது 700 கிராம் எடையுள்ள குப்பைகள் விழுந்து, அவரது கூரை உடைந்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த குப்பைகள் 2021-ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கழிவுகளாக வெளியிடப்பட்ட பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளின் சரக்குத் தட்டுகளின் ஒரு பகுதி என்று நாசா கூறியது.
வளிமண்டலத்தில் நுழைந்த பிறகும் அது முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தி கார்டியன் அறிக்கையின்படி, சட்ட நிறுவனமான Cranfill Sumner பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கை எடுத்து நாசாவிற்கு எதிராக போராடுகிறது.
ஃபுளோரிடாவின் Naples-ல் தனது வாடிக்கையாளர் அலெஜான்ட்ரோ ஓட்டேரோவுக்கு (Alejandro Otero) வீடு இருப்பதாகவும், அவரது வீட்டின் மேல் விண்வெளி குப்பை விழுந்ததால் மேற்கூரையில் ஓட்டை ஏற்பட்டது என்றும் சட்ட நிறுவனம் கூறியுள்ளது.
குப்பைத் துண்டு விழுந்தபோது ஓட்டேரோவின் குழந்தை வீட்டில் இருந்ததாகவும், இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கலாம் என்பதால், இதற்கு நாசா ஈடு செய்ய வேண்டும் என்று சட்ட நிறுவனம் கோரியுள்ளது.
இந்த சம்பவம் தனது வாடிக்கையாளரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் Micah Nguyen Worthy கூறியுள்ளார்.
விண்வெளியில் குப்பைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனால் விபத்துகளும் அதிகரித்து வருவதாகவும் சட்ட நிறுவனம் கூறியுள்ளது.
இந்த பிரச்சினைக்கு நாசா உடனடி பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
NASA Space Debris, ISS Debris, Alejandro Otero, NASA