பிரான்ஸ் புறப்பட்ட அமெரிக்க இளம்பெண்கள் இருவர்: ஆப்பிரிக்காவில் சென்று இறங்கிய வேடிக்கை சம்பவம்
பிரான்சுக்குப் புறப்பட்ட இரண்டு அமெரிக்க இளம்பெண்கள், ஆப்பிரிக்காவைச் சென்றடைந்ததைக் குறித்த வேடிக்கை சம்பவம் ஒன்று வைரலாகியுள்ளது.
பிரான்ஸ் புறப்பட்ட அமெரிக்க இளம்பெண்கள்
ரோமுக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்க இளம்பெண்களான பிரிட்னியும் (Brittney Dzialo) அவரது தோழி ஒருவரும், பிரான்சிலுள்ள நீஸ் (Nice) என்னுமிடத்துக்குப் புறப்பட்டுள்ளார்கள்.
விமானத்திலுள்ள ஒரு பயணியிடம், இந்த விமானம் Niceக்கு செல்கிறதா என பிரிட்னி கேட்கிறார் (Is this plane going to Nice?).
அந்தப் பயணி, இந்த விமானம் டுனிஸ் என்னுமிடத்துக்குச் செல்கிறதா என பிரிட்னி கேட்பதாக நினைத்து, ஆம் டுனிஸ்தான் என பதிலளிக்கிறார் (Tunis, yeah).
பிறகு விமானப்பணியாளர்களிடம் விசாரிக்கும்போதுதான், அந்த விமானம் வட ஆப்பிரிக்காவிலுள்ள Tunisiaவின் தலைநகரான Tunis என்னுமிடத்துக்குச் செல்வது தெரியவந்துள்ளது.
Tunis சென்று இறங்கியபின், அங்கிருந்து வேறொரு விமானத்தில் ஏறி ஒருவழியாக பிரான்சிலுள்ள நீஸ் என்னுமிடத்தை வந்தடைந்ததாக சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரிட்னி.
அதைப் படித்த பலரும் விமானப் பயணங்களில் இப்படி குழப்பம் நிகழ்வது சகஜம் தான் என கூற, சிலரோ, எந்த விமானத்தில் ஏறுகிறோம் என்பது கூடவா தெரியாமல் விமானப் பயணம் செய்வார்கள், இது வேண்டுமென்றே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்கிறார்கள்.
எப்படியோ, பிரிட்னியின் சமூக ஊடக இடுகை வைரலாகிவிட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |