இளவரசர் ஹரிக்கு எதிராக களமிறங்கும் அமெரிக்க அரசு: புதிய சிக்கல்
அமெரிக்காவில் வாழும் பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு எதிராக, அமெரிக்க அரசே நீதிமன்றம் செல்ல உள்ளதைத் தொடர்ந்து, அவருக்கு புதிய சிக்கல் உருவாகியிருப்பதாக கருதப்படுகிறது.
தவளைத் தன் வாயால் கெடும் என்பதுபோல..
தவளைத் தன் வாயால் கெடும் என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, சும்மா இருக்காமல், புத்தகம் எழுதுகிறேன் பேர்வழி என தன் வாழ்வில் நடந்த அத்தனை ரகசியங்களையும் ஸ்பேர் என்னும் புத்தகத்தில் கொட்டித் தீர்த்திருந்தார் ஹரி.
அது போதாதற்கு புத்தகம் விற்பனையாவதற்காக புரமோஷன் செய்கிறேன் என்று மேலும் பல விடயங்களை தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் வெளியிட்டார். தற்போது, அவர் வெளியிட்ட ரகசியம் ஒன்று மீண்டும் அவருக்கொரு பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
Image: POOL/AFP via Getty Images
இளவரசர் ஹரிக்கு எதிராக களமிறங்கும் அமெரிக்க அரசு
ஹரி தனது புத்தகத்தில் வெளியிட்டிருந்த பல விடயங்களில், அவர் பலவகை போதைப்பொருட்களை பரிசோதித்துப் பார்த்ததாக கூறியிருந்த விடயமும் ஒன்று.
சிக்கல் என்னவென்றால், அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் விடயத்தில், எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.
Image: Evan Agostini/Invision/AP/REX/Shutterstock
அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும். அப்படியிருக்கும் நிலையில், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் ஹரி, விசா விண்ணப்பத்தில் பொய் சொன்னாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த விடயம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை, இந்த விடயம் தொடர்பாக, அமெரிக்க அரசு சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள்.
Image: Getty Images
அதாவது, Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்துள்ளது.
ஆகவே, வாஷிங்டன் டி சி பெடரல் நீதிமன்றத்தில் அது தொடர்பான விசாரணை இம்மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, ஹரி அமெரிக்காவில் வாழ்வதற்கு சிக்கல் ஏற்படலாம் என கருதப்படுகிறது.