பிள்ளைகளுடன் தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர்: அமெரிக்க அரசின் கெடுபிடியால் அவல நிலை
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பலர், புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு பயந்து தலைமறைவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசின் கெடுபிடியால் ஏற்பட்டுள்ள அவலம்
ட்ரம்ப் நிர்வாகம், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்னும் பெயரில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கூட விட்டுவைக்காமல், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 14 மில்லியன் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் வாழ்ந்துவருவதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் புலம்பெயர்தல் அதிகாரிகளின் கண்களில் பட்டுவிட்டால் நாடுகடத்தப்படலாம் என்னும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
ஆகவே, புலம்பெயர்தல் அதிகாரிகளிடம் சிக்கிவிடாமல் இருப்பதற்காக தங்கள் பிள்ளைகளின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தலைமறைவாகிவருகிறார்கள் அவர்கள்.
எப்போதும் பயத்துடன் வாழ்ந்துவரும் அவர்களுக்கு, இந்த புலம்பெயர்தல் அதிகாரிகள் குறித்து சக புலம்பெயர்ந்தோரிடமிருந்து தகவல் பெற சமூக ஊடகங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றனவாம்.
என்றாலும், புலம்பெயர்தல் அதிகாரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கூட விட்டுவைக்காமல், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதால், ரெய்டுகள் குறித்த செய்திகள், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு கூடுதல் அச்சத்தை உருவாக்கியுள்ளனவாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |