எல்லா துறைகளிலும் இனவெறுப்பு என்னும் ஆயுதம்... சுவிஸ் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ள வீராங்கனை
ஒருவரை பிடிக்கவில்லையா, தனக்குப் பிடித்தவருக்கு எதிராக ஒருவர் திடீரென புகழ் பெறுகிறாரா, அவரை தாக்கவேண்டுமென்றால் இன்று உலகம் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இனவெறுப்பு.
அதுவும், சமூக ஊடகங்கள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, மனதில் பட்டதையெல்லாம் கொஞ்சமும் முன்பின் யோசிக்காமல் கொட்டிவிடும் ஒரு இடமாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன.
பிரபல சமூக ஊடகமான எக்ஸின் உரிமையாளரான எலான் மஸ்க் கூட, கொஞ்சமும் யோசிக்காமல், கமலா ஹரிஸையும் ஜோ பைடனையும் ஏன் யாரும் கொல்ல முயற்சிக்கவில்லை என தனது சமூக ஊடகத்தில் எழுதியதை சிலர் அறிந்திருக்கக்கூடும்.
சுவிஸ் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ள வீராங்கனை
அமெரிக்க தடகள வீராங்கனையான ஜோர்டன் சைல்ஸ் (Jordan Chiles) என்பவர், ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஆனால், அவரது பதக்கம் பறிக்கப்பட்டு, ரொமேனியா நாட்டவரான Ana Barbosu என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. Court of Arbitration for Sport என்னும் அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் ரொமேனியாவின் ஆலோசகராக பல ஆண்டுகள் செயல்பட்டுவந்தவர் ஆவார்.
ஆகவே, அவர் பாரபட்சமாக செயல்பட்டு தனது பதக்கத்தைப் பறித்து ரொமேனிய விளையாட்டு வீராங்கனைக்குக் கொடுத்துவிட்டதாக சுவிஸ் பெடரல் நீதிமன்றத்தில் ஜோர்டனுடைய சட்டத்தரணிகள் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
இதற்கிடையில், தான் கருப்பினத்தவர் என்பதால் சமூக ஊடகங்களில் இனவெறுப்பு விமர்சனங்களுக்கு ஆளாகிவருவதாக கண்ணீர் விட்டுள்ளார் ஜோர்டன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |