இனி எப்போதும் இளமையாக இருக்கலாம்! வயதை குறைக்கும் வேதிக் கலவை கண்டுபிடிப்பு
மனிதர்களின் வயதை குறைக்கும் வேதிக் கலவை கண்டுபிடித்து இருப்பதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வயதை குறைக்கும் வேதிக் கலவை
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வயதாவதை கட்டுப்படுத்தும் (anti-aging)புதிய கண்டுபிடிப்பை செய்து உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
இது தொடர்பாக டேவிட் ஷின்கிளயர் என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில், முதலில் மரபணு சிகிச்சை மூலம் வயதாவதை குறைக்க முடியும் என்பதை நிருபித்தோம், தற்போது வேதிக் கலவைகள் மூலமாகவும் வயதாவதை குறைக்க முடியும் என்பதை ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Getty
அத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் குழு மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் விளைவாக, வயதை குறைக்கும் மூலக்கூறுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய கண்டுபிடிப்பு மனித செல்களுக்கு மலிவு விலையில் புத்துணர்ச்சி தருவதற்கான ஒரு முன்நகர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி பெற்ற சோதனை
இந்த வேதிக் கலவை முதல் கட்டமாக எலி மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்ட நிலையில், சோதனையின் முடிவில் அவற்றின் சிறுநீரகம், மூளை திசுக்கள் மற்றும் பார்வை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
PR
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |