அமெரிக்க பள்ளியில் இந்திய வம்சாவளி மாணவர் அனுபவித்த கொடுமை! இணையத்தில் விமர்சனத்தை தூண்டிய வீடியோ
டெக்சாஸில் இந்திய அமெரிக்க மாணவர் கொடுமைப்படுத்தப்படுவதைக் காட்டும் வைரலான வீடியோ சமூக ஊடகங்களில் கோபத்தையும் விமர்சனத்தையும் தூண்டியுள்ளது.
மாணவர் கொடுமைப்படுத்தப்படும் வீடியோவை சக மாணவர்கள் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். ஒரு மாணவர் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கும் இந்திய அமெரிக்க பையனை அணுகி எழுந்து நிற்கும்படி கேட்கிறார். அவர் தனது இருக்கையை கொடுக்க மறுத்ததால், அமெரிக்க மாணவர் கோபமடைந்து அவரது கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிடுகிறார்.
அவர் இந்திய அமெரிக்க மாணவனின் கழுத்தை தனது முழங்கையால் பின்னால் இருந்து நெருக்கி, அழுத்தி, அவரை மூச்சுத் திணறடித்து, அவரது இருக்கைக்கு எதிராக தள்ளுகிறார்.
டெக்சாஸில் உள்ள கொப்பல் நடுநிலைப் பள்ளியில் (Coppell Middle School North) இந்தச் சம்பவம் நடந்தது.
36 ஆண்டுகளாக ஆண் வேடத்தில்., மகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த வீரத்தாய்!
பள்ளியின் கண்காணிப்பாளர் டாக்டர். பிராட் ஹன்ட் ஒரு மின்னஞ்சலில், கோப்பல் நடுநிலைப் பள்ளி வடக்கில் இரண்டு மாணவர்களுக்கு இடையே உடல்ரீதியான தகராறு ஏற்படுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதை Coppell பள்ளிக்கு தெரியவந்தது. கொடுமைப்படுத்துதல், வாய்மொழி மற்றும் உடல் ரீதியான ஆக்கிரமிப்பு மற்றும் உடல் ரீதியான ஆக்கிரமிப்பு செயல்கள் ஒருபோதும் இப்பள்ளியில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் அதிகரிக்கும் குரங்கம்மை; ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எச்சரிக்கை!
Hello @Coppellisd,
— Danesh (@thatdaneshguy) May 17, 2022
You really witnessed this video and punished the victim?
Is this how you believe brown kids should be treated?
Let's change your mind:
Can my followers do me a favor and please tag media outlets the Coppell, Texas area. Thank you 🤎 pic.twitter.com/a0nAJDoAWu
ஓன்லைனிலும் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, பல பயனர்கள் வீடியோவில் தாக்குதலைத் தெளிவாகக் காட்டியதைச் சுட்டிக்காட்டி பரவலாக விமர்சிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கொப்பல் நடுநிலைப்பள்ளி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமைப்படுத்தப்பட்ட மாணவரின் பெற்றோர்கள் தங்கள் மகன் மூன்று நாள் இடைநீக்கத்தைப் பெற்றதாகவும், தாக்கிய மாணவருக்கு ஒரு நாள் இடைநீக்கம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது என்றும் இது கடுமையான செயல் என பள்ளியின் மீது குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளியின் உள் விசாரணை முடிவடையும் வரை பெற்றோர்கள் இப்போது சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை நாடியுள்ளனர்.
இந்திய அமெரிக்க மாணவனுக்கு ஆதரவாக 150,000-க்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட ஓன்லைன் மனுவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.