5 வயதில் மகள்., மனைவி கர்ப்பம்., அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் தனது கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபர் துப்பாக்கியால் சுட்டதால் உயிரிழந்தார். இந்த சம்பவம் வடக்கு கரோலினாவில் நடந்துள்ளது.
உயிரிழந்தவர் 36 வயதான மைனாங்க் படேல் (Mainank Patel) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படேல் 2580 Airport சாலையில் Tobacco House என்ற convenience storeஐ நடத்தி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை காலை அவரது கடையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த படேல் முதலில் Novant Health Rowan Medical Center-க்கு கொண்டுசெல்லப்பட்டார், பிறகு அங்கிருந்து Charlotte-ல் உள்ள Presbyterian வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இரண்டு வைத்தியசாலைகளுக்கு சென்றும் எந்த பயனும் இல்லை. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், படேல் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.
குறித்த மைனர் சிறுவனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது படேல் சுடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. படேல் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 வயதில் மகள்., மனைவி கர்ப்பம்
துப்பாக்கிச் சூட்டில் படேல் இறந்ததற்கு அவரது வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். அவரது கடையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
'மைக்' என்று அழைக்கப்படும் படேல் ஒரு தாராளமான மற்றும் கனிவான மனிதர் என கூறப்படுகிறது.
படேலின் மனைவி கர்ப்பமாக உள்ளார், அவருக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian-origin man shot dead by teenager in convenience store robbery in North Carolina, Indian-origin news