பதட்டங்களுக்கு மத்தியில் ஈரானை மிரட்ட அமெரிக்க-இஸ்ரேல் போர் விமானங்கள் சேர்ந்த செய்த செயல்...! வெளியான கட்சி
முதன் முறையாக இஸ்ரேல் வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களுடன் இஸ்ரேல் போர் விமானங்கள் சேர்ந்து பறந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து இஸ்ரேலிய விமானப்படை ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேலிய விமானப்படை எஃப் -15 போர் விமானங்கள் இரண்டு அமெரிக்க பி -52 விமானங்களுடன் இஸ்ரேலிய வான்வெளியில் பறந்தன.
இந்த விமானங்கள் அமெரிக்கப் படைகளுடனான போர்த் திறன் சார்ந்த கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இது இஸ்ரேலிய மற்றும் மத்திய கிழக்கு வான்வெளி பாதுகாப்பை பராமரிப்பதில் முக்கியமானது என தெரிவித்துள்ளது.
ஈரானின் உயர்மட்ட அணு இயற்பியலாளர் Mohsen Fakhrizadeh படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன, ஈரான் அவரது மரணத்திற்கு இஸ்ரேலிய உளவுத்துறை மீது குற்றம் சாட்டினார். இஸ்ரேல் தற்போது வரை குற்றச்சாட்டுகளை நிராகரிக்கவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனிடையே, ஈரானை மிரட்ட அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தனது வான்வெளியில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
எனினும், இந்த நடவடிக்கை ஈரானை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் பிராந்தியத்தில் மிக உயர்ந்த பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஈரானுக்கு தங்களது சக்தியைக் காண்பிப்பதற்காக பிராந்தியத்தின் மீது விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.
Today (Sunday), Israeli Air Force F-15 fighter jets escorted two American B-52 bombers through Israeli airspace.
— Israel Defense Forces (@IDF) March 7, 2021
This flight is part of the joint strategic cooperation with US forces, which is pivotal in maintaining the security of Israeli and Middle Eastern skies. pic.twitter.com/CViOa3LvBT