2024-ல் இந்தியாவுக்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ள அமெரிக்கா
அமெரிக்கா 2024-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட non-immigrant விசாக்களை வழங்கியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மில்லியன் விசாக்களை வழங்கியுள்ளதால் இது புதிய சாதனை ஆகும்.
இந்த விசாக்களில் பெரும் பகுதி சுற்றுலா, வணிக மற்றும் கல்வி நோக்கங்களுக்கானவை.
2024-ஆம் ஆண்டில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
"விசா நேர்முக நேர்காணலுக்கான காலதாமதம் குறைக்கப்பட்டு, மறுதர விசா விண்ணப்பிக்கும் செயல்முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வது மிக எளிதாகி உள்ளது," என்று அமெரிக்காவின் இந்திய மிஷன் கூறுகிறது.
2024-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ளனர்.
இது 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
மேலும், அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்முறை வேலைகளுக்கான ‘H-1B’ விசா புதுப்பிப்பு செயல்முறை முதல் முறையாக அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
இதனால், அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாமல் வேலைகள் தொடர்பான விசாக்களை புதுப்பிக்க முடிந்தது.
கல்வி தொடர்பாக, இந்தியா 2024-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களை அதிகளவில் அனுப்பிய நாடாக முதல் இடத்தை பிடித்தது. 331,000 மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்றனர்.
இந்த முன்னேற்றங்கள் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் பலப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US issues more than one million non-immigrant visas to India , US tourist Visa, US Student Visa, US Visa to Indians