உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா விடுத்த திடீர் எச்சரிக்கை
ஈரானுடனான போர் சூழல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மறுபரிசீலனை செய்ய
அதில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாக நீடிப்பதாகவும், எதிர்பாராத விதமாக நிலைமை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வதையும் அதன் வழியாகப் பயணம் செய்வதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக வளாகங்கள் அல்லது உலகம் முழுவதும் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தால் சில வாரங்கள் நீடித்த அமைதிக்குப் பிறகு மத்திய கிழக்கில் போர் மீண்டும் தொடங்கியுள்ளது; ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அமெரிக்கா மோதத் தொடங்கியதால், கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
படையெடுக்கலாம்
அமெரிக்காவுடனான போர்நிறுத்தம் முறிந்ததால், ஈரான் ஹார்முஸ் நீர்வழிப்பாதையை மீண்டும் முற்றுகையிட்டது; இதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களை மீண்டும் முற்றுகையிட்டது.

இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மிக விரைவில் படையெடுக்கலாம் என்ற கருத்தும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவுடன் முழுமையான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் ஊடுருவலாம் எனவும், அதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |