பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை ஜனாதிபதி ஜோ பைடன் புறக்கணித்தாரா? இணையத்தில் பரவும் வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை புறக்கணிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜோ பைடன் சுற்றுப்பயணம்
புனித வெள்ளி ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை வடக்கு அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அயர்லாந்து குடியரசிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன் ஜோ பைடன், பிரித்தானியாவில் தனது அரை நாளை கழித்தார்.
?
— Russian Market (@runews) April 12, 2023
Joe Biden pushes Rishi Sunak out the way to greet someone else as he didn’t recognize the UK PM
pic.twitter.com/PRs4ptOsBu
எப்போதும் அவரது ஐரிஷ் பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளும் ஜனாதிபதி ஜோ பைடன், அயர்லாந்தை "என் ஆன்மாவின் ஒரு பகுதி" என்று அழைக்கிறார்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் பெல்பாஸ்ட் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வரவேற்றார்.
அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை வைத்து விட்டு வேறொருவரை வாழ்த்துவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பிரித்தானிய பிரதமரை ஜனாதிபதி பைடன் அங்கீகரிக்கத் தவறிவிட்டாரா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
மேலும் நெட்டிசன்கள் வீடியோவைப் பகிர்ந்து ஜோ பைடன் ரிஷி சுனக்கை அடையாளம் காணாததால் வேறொருவருக்கு சல்யூட் செய்ததாக கூறியுள்ளனர்.
ஆனால் வீடியோவை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், பைடன் சுனக்கின் கைகளை குலுக்கி, வழக்கத்திற்கு மாறான முறையில் பைடன் சுனக்கை வாழ்த்தினார்.