முதல் முழுநேர விண்வெளி வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவிய அமெரிக்கா
அமெரிக்கா, விண்வெளி வானிலை மாற்றங்களை கண்காணிக்க தனது முதல் முழுநேர செயற்கைக்கோளை NOAA SOLAR-1-ஐ வெற்றிகரமாக ஏவியுள்ளது.
இந்த செயற்கைக்கோள், சூரியனில் இருந்து வரும் சூரிய காற்று மற்றும் coronal mass ejections (CME) போன்ற ஆபத்தான நிகழ்வுகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும்.
SOLAR-1, பூமி மற்றும் சூரியன் இடையே உள்ள Lagrange Point-இல் (பூமியிலிருந்து சுமார் 10 லட்சம் மைல் தொலைவில்) அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சூரிய புயல் தாக்கம் ஏற்படும் முன் 30 நிமிடங்களில் எச்சரிக்கை வழங்க முடியும். தற்போதைய அமைப்புகள் 8 மணி நேரம் வரை எடுக்கின்றன.

இந்த செயற்கைக்கோள், GPS, தொடர்பு அமைப்புகள், செயற்கைக்கோள்கள், மின்சார வலையமைப்புகள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்களை பாதுகாக்க உதவும்.
மேலும், சூரிய புயலால் ஏற்படும் மின்சார தடைகள், விமான சேவை பாதிப்புகள், இராணுவ நடவடிக்கைகள் போன்ற அபாயங்களை குறைக்க உதவும். அதோடு, SOLAR-1 வழங்கும் தரவுகள், வடக்கு மற்றும் தெற்கு ஒளி (Aurora) நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கவும் உதவும்.
இது விஞ்ஞானிகளுக்கும், வானியல் ஆர்வலர்களுக்கும் பெரும் பலனாக இருக்கும். இந்த திட்டம், அமெரிக்காவை விண்வெளி வானிலை கண்காணிப்பில் உலகின் முன்னணியில் நிறுத்துகிறது.
எதிர்காலத்தில், NASA மற்றும் பிற நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கும் இது முக்கிய ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |