அமெரிக்காவில் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத சுங்க வரியை நீக்க முயற்சி
அமெரிக்காவின் House of Representatives உறுப்பினர்கள் மூவர், ட்ரம்ப் அரசாங்கம் இந்தியாவிற்கு விதித்துள்ள 50 சதவீத சுங்க வரியை ரத்து செய்யும் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த தீர்மானத்தை டெபோரா ராஸ், மார்க் வீசி, ராஜா கிரிஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்வைத்துள்ளனர்.
அவர்கள், “இந்த சுங்க வரிகள் சட்டவிரோதமானவை, அமெரிக்க தொழிலாளர்கள், நுகர்வோர் மற்றும் இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன” எனக் கூறியுள்ளனர்.
2025 ஆகஸ்ட் 27 அன்று, இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீதம் “secondary duties” விதிக்கப்பட்டது. இதனால், மொத்த சுங்க வரி 50 சதவீதமாக உயர்ந்தது. இது International Emergency Economic Powers Act (IEEPA) சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டது.

நார்த் கரோலினா மாநிலத்தின் பொருளாதாரம் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. அங்கு இந்திய நிறுவனங்கள் பில்லியன் டொலருக்கு மேல் முதலீடு செய்து, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
அதேசமயம், நார்த் கரோலினா உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு பல மில்லியன் டொலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர்.
காங்கிரஸ்மேன் வீசி, “இந்த சட்டவிரோத சுங்க வரிகள், ஏற்கனவே விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட நார்த் டெக்சாஸ் மக்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, அமெரிக்க செனட் பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட இதேபோன்ற சுங்க வரிகளை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது. இப்போது, இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட சுங்க வரிகளை நீக்குவதற்கான முயற்சி, இரு நாடுகளின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவுகள் புதிய நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US House resolution India tariffs 2025, Trump 50 percent tariff on India goods, Deborah Ross Marc Veasey Raja Krishnamoorthi, IEEPA emergency powers trade duties, US Senate Brazil tariff rollback precedent, India US trade relations strengthening, North Carolina India investment jobs, Texas consumers tariff impact rising costs, US India bilateral economic partnership, Ending secondary duties imports India