மந்திரவாதி மூலம் இறந்த தந்தையுடன் உரையாடிய மகன்: லொட்டரியில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்
உயிரிழந்த தந்தை லொட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறியதை அடுத்து, அமெரிக்காவை சேர்ந்த வெஸ்ஸி பிரன்சுவிக் என்ற 55 வயதான நபர் ஒருவர் லாட்டரியில் 33,000 பவுண்டுகள் வெற்றி பெற்றுள்ளார்.
இறந்த தந்தையின் வாக்கு
அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியை சேர்ந்த வெஸ்ஸி பிரன்சுவிக் என்ற 55 வயது நபர், தனது இறந்து போன தந்தை தன்னை தொடர்பு கொண்டு லொட்டரி டிக்கெட்டை வாங்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பவர்பால் மற்றும் மெகா மில்லியன் காம்போ டிக்கெட்டுகளை வாங்கிய வெஸ்ஸி பிரன்சுவிக், சுமார் 33,000 பவுண்டுகள் மதிப்புள்ள லொட்டரியை வென்றுள்ளார்.
Getty Images
தன்னுடைய உயிரிழந்த தந்தை தீவிர லொட்டரி விளையாடுபவர் என்று சுட்டிக்காட்டிய வெஸ்ஸி பிரன்சுவிக், அவர் தனது கல்லறையில் இருந்து மந்திரவாதி மூலம் தனக்கு இந்த அறிவுரையை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
எதிர்கால திட்டம்
லொட்டரியில் வென்ற பெரும்பாலான தொகை எதிர்கால திட்டங்களுக்காக வங்கியில் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெஸ்ஸி பிரன்சுவிக் தெரிவித்துள்ள கருத்தில், எங்கள் வாழ்க்கையில் குழந்தைகளின் கல்விக் கடன்கள் செலுத்தப்பட வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம், இனி எங்களிடம் அடமானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
AFP via Getty Images
வெற்றிகள் பற்றிய செய்தி முதலில் அறிவிக்கப்பட்டதில் இருந்து, 55 வயதான நபர் "வெஸ்ஸி பிரன்சுவிக்" என்ற புனைப்பெயரில் சுற்றி வருகிறார் என்று people அறிக்கைகள் சுட்டிக்காட்டி வருகிறது.