6 மாதங்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர்: நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு
நேபாள நாட்டின் எல்லைக்கு அருகே அமெரிக்க குடிமகன் ஒருவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி பிடிபட்டுள்ளார்.
பிடிபட்ட அமெரிக்க குடிமகன்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நேபாள நாட்டு எல்லைக்கு அருகில் சுற்றித்திரிந்த 36 வயது அமெரிக்க குடிமகன் ஜோர்டன் பிரவுன்(Jordan Brown) என்ற நபரை “சஷாஸ்த்ர சீமா பல்” (SSB)படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஜோர்டன் பிரவுன் ஞாயிற்றுக்கிழமை சோனெளலி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட நேபாள் எல்லையின் 516 தூண் அருகே SSB-யின் 22வது படைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
अमेरिकी नागरिक Jordan Brown को भारत-नेपाल सीमा पर बिना वैध Travel Documents के नेपाल में घुसने की कोशिश करते हुए गिरफ्तार किया गया। उसने दावा किया कि वह U.S. Navy और Special Forces में काम कर चुका है।पहले भी भारत-म्यांमार सीमा से सटे इलाकों में कई विदेशी नागरिकों को पकड़ा गया है pic.twitter.com/2z91iXoJHY
— Bimal Sharma (@BimalSharm50754) July 14, 2026
பாஸ்போர்ட், விசா போன்ற எந்தவொரு முறையான ஆவணங்களும் அவரிடம் இல்லாத நிலையில், கைது நடவடிக்கையின் போது ஜோர்டன் பிரவுன் தப்பிக்க முயற்சி செய்ததாகவும், இருப்பினும் அவர் சிறைபிடிக்கப்பட்டு உத்தரப் பிரதேச பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இந்தியாவிற்கு நுழைந்த பிரவுன்
பிரவுனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை தவறவிட்டுள்ளார்.
பின்னர் கடல் வழியாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, பின்னர் நவம்பர் 2ம் திகதி 2025ம் ஆண்டு கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.
கிட்டத்தட்ட 6 மாதங்களாக எந்தவொரு முறையான ஆவணங்களும் இல்லாமல் அவர் இந்தியாவில் தங்கியிருந்துள்ளார்.

கோவாலில் இருந்து பெங்களூர் சென்று பின்னர் சோனெளலி எல்லையில் பகுதி வழியாக நேபாளத்திற்குள் நுழைய முயன்ற போது பிடிபட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 31,460 ரூபாய் பணமும், இரண்டு தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜோர்டன் பிரவுன் மீது தற்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 21/23 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |