மர்ம எழுத்துகள் நிறைந்த துண்டு காகிதம்...உடல் சிதைந்து இறந்து கிடந்த 75 வயது முதியவர்

United States of America New York Crime Death
By Thiru Aug 12, 2022 07:52 AM GMT
Report
  • உடல் சிதைந்து நிலையில் இறந்து கிடந்த ஜான் ருகெரோவை பொலிஸார் அவரது குடியிருப்பில் கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
  • குடியிருப்பில் இருந்து எச்சரிக்கை - ஆபத்து, இந்தக் கதவைத் திறக்காதே. ஏன் இறக்க வேண்டும்? போன்ற மர்ம வாசகங்களும் கண்டெடுப்பு

அமெரிக்காவின் புரூக்களின் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஜான் ருகெரோவின்(75) என்ற நபரின் உடல் சிதைந்து இறந்த நிலையில் உயிர் அபாய லேபிள்களுடன் கூடிய கேனிஸ்டர்களுக்கு அடுத்ததாக கண்டெடுக்கப்பட்டதாக வியாழன்கிழமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசிவதை அந்த அபார்ட்மெண்டில் தரைதளத்தில் மோமோ உணவகம் வைத்து இருந்த உரிமையாளர் சோஹில் ஜமான் கவனித்துள்ளார்.

மேலும் கடந்த 10 நாட்களாக ஜான் ருகெரோவையும் தாம் பார்க்கவில்லை என்பதை உணர்ந்த ஜமான் உடனடியாக 911க்கு அழைத்துள்ளார்.

மர்ம எழுத்துகள் நிறைந்த துண்டு காகிதம்...உடல் சிதைந்து இறந்து கிடந்த 75 வயது முதியவர் | Us Man Decomposing Corpse Found Brooklyn Apartment

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஜான் ருகெரோவின் வீட்டை சோதனையிட்டனர், அப்போது ஜான் ருகெரோ உயிர் அபாய லெபிள்களுடன் கூடிய கேனிஸ்டர்களூக்கு அடுத்ததாக அமர்ந்த நிலையில் உடல் சிதைந்து இறந்து கிடந்ததை பொலிஸார் கண்டுள்ளனர்.

அத்துடன் ருகெரோவின் குடியிருப்பில் இருந்து கச்சா வரைப்படங்கள், ஓவியங்கள், சில இரசாயன கலவைகள், பேட்டரி, சிலிண்டர்களில் ஒன்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர், மேலும் ஒரு துண்டு காகிதத்தில் எச்சரிக்கை - ஆபத்து, இந்தக் கதவைத் திறக்காதே. ஏன் இறக்க வேண்டும்? என்பது போன்ற வார்த்தைகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மர்ம எழுத்துகள் நிறைந்த துண்டு காகிதம்...உடல் சிதைந்து இறந்து கிடந்த 75 வயது முதியவர் | Us Man Decomposing Corpse Found Brooklyn ApartmentNew York Daily News

இதுத் தொடர்பாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், ருகெரோ பயங்கரவாத தாக்குதலுக்குத் திட்டமிடும் சாத்தியக்கூறுகளை தள்ளுபடி செய்தனர், ஆனால் ருகேரோவிற்கு மனநலப் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என நம்புவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வினோதமான சம்பவம் குறித்து FBI இன் கூட்டு பயங்கரவாதப் பணிக்குழு, நகரின் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை மற்றும் பிற நிறுவனங்களின் அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ருகேரோ இறந்து குறைந்தது 1 வாரமாவது ஆகி இருக்கலாம் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மர்ம எழுத்துகள் நிறைந்த துண்டு காகிதம்...உடல் சிதைந்து இறந்து கிடந்த 75 வயது முதியவர் | Us Man Decomposing Corpse Found Brooklyn ApartmentNew York Daily News

கூடுதல் செய்திகளுக்கு: சுவிட்சர்லாந்தில் சாலை விபத்தில் சிக்கிய வெளிநாட்டு புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

ருகெரோவின் அண்டை வீட்டார் டிராடோ வியாழக்கிழமை அவரைப் பற்றி தெரிவித்த கருத்தில், ருகெரோ அற்புதமான மனிதர், எப்பொழுதும் அனைவரையும் வாழ்த்துவார், அனைவருக்கும் அவரைத் தெரியும், எப்போதும் நன்கொடை. அவ்வளவு அக்கறை கொண்ட மனிதர் என தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US