வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடித்த வயதான பெண்! பின்னர் தெரியவந்த உண்மை.. பொலிஸார் தேடுதல் வேட்டை
அமெரிக்காவில் வயதான பெண் போல் வேடமிட்ட நபர் ஒருவர் வங்கியில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜியாவில் உள்ள அமெரிக்க பொலிஸார், வங்கியில் கொள்ளையடிக்க வயதான பெண் வேடமணிந்த ஒருவரை தேடி வருகின்றனர்.
சம்பவத்தன்று, சந்தேக நபர் மலர் ஆடை, வெள்ளை ஸ்னீக்கர் ஷூஸ், ஆரஞ்சு லேடக்ஸ் கையுறைகள், வெள்ளை விக் மற்றும் கருமையான முகக்கவசம் அணிந்து முற்றிலுமாக அடையாளத்தை மறைத்து கொள்ளையடித்துள்ளார்.
தகவல்களின்படி, சந்தேக நபர் ஒரு கறுப்பின மனிதர், சுமார் 6 அடி உயரம் மற்றும் மெலிந்தவர் என விவரிக்கப்பட்டுள்ளது.
PC: FB/McDonough Police
பொலிஸாரின் தகவல்களின்படி, திங்கட்கிழமை அட்லாண்டாவின் தென்கிழக்கில் உள்ள ஹென்றி கவுண்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மாறுவேடத்தில் வந்த சந்தேக நபர், McDonough நகரில் உள்ள Chase வங்கிக்கு பையில் மறைத்துவைத்து துப்பாக்கியுடன் நுழைந்தார். பின்னர் அவர் வங்கி ஊழியர் ஒருவரிடம் பணம் கேட்டு ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளார்.
பணத்தை எடுத்துக் கொண்ட பிறகு, அந்த நபர் ஒரு சிறிய, வெள்ளை SUV காரை ஓட்டிச் சென்றார். அந்த கார் புதிய Lexus மாடலாக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகிறார்கள். காரில் பதிவு எண் அதில் காணப்படவில்லை.
மாறுவேடமிட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் மெக்டொனாஃப் காவல் துறையால் பேஸ்புக்கில் பகிரப்பட்டது. இந்நிலையில், வயதான அப்பெண் வேடமிட்டு நூதனமாக கொள்ளையடித்துச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.