பாலத்தீன சிறுவனுக்கு இனவெறியால் கொடூரம்! 26 முறை கத்திக்குத்து..முதியவருக்கு 53 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் பாலஸ்தீன சிறுவனை இனவெறியால், 26 முறை கத்தியால் குத்திய முதியவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலஸ்தீன சிறுவன்
இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஜோசப். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் பாலஸ்தீன சிறுவனான அல்ப்யோமி விளையாடிக் கொண்டிருந்தபோது ஜோசப் தாக்கியுள்ளார்.
இனவெறியால் அவர் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தியுள்ளார். அப்போது சிறுவனின் தாய் தடுக்க வந்துள்ளார்.
53 ஆண்டுகள் சிறை
ஆனால், அவரும் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளாகினார். இதனையடுத்து ஜோசப் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இல்லினாய்ஸ் மாகாண நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், ஜோசப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |