20,000 முறை தேனீக்களால் கொட்டப்பட்ட இளைஞர்; செத்துப்பிழைத்த அதிசயம்!
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் 20,000 முறை தேனீக்களால் கொட்டப்பட்டு கிட்டத்தட்ட செத்துப்பிழைத்துள்ளார்.
அவர் ஆப்பிரிக்க கொலையாளி தேனீக்கள் (African killer bees) என்று அழைக்கப்படும் பயங்கரமான தேனீக்களால் தாக்கப்பட்டார்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 20 வயது இளைஞர் ஆயிரக்கணக்கான முறை தேனீக்களால் கொட்டப்பட்ட பிறகு இப்போது வென்டிலேட்டரில் உயிர் ஆதரவில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்டின் பெல்லாமி (Austin Bellamy) எனும் அந்த இளைஞன், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, தனது நண்பருக்காக எலுமிச்சை மரங்களை வெட்டிக்கொண்டிருந்தபோது தவறுதலாக தேனீக் கூட்டில் வெட்டப்பட்டதால், ஆயிரக்கணக்கான தேனீக்கள் அவரது முகம் கழுத்து என தலையை மொத்தமாக சூழ்ந்து காட்டியுள்ளன.
அவரது உடல் முழுவதும் குறைந்தது 20,000 முறை தேனீக்கள் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Lian van den Heever/Getty Images-Shawna Carter(Fb)
செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் இருந்த நிலையில், அவர் இப்போது, மருத்துவமனையில் வென்டிலேட்டரில் இருக்கிறார் என்று அவரது தாயார் ஷவ்னா கார்ட்டர் கூறியுள்ளார். மேலும், அவரது மருத்துவச் செலவுகளைச் செலுத்துவதற்காக அவர் ஆன்லைன் நிதி திரட்டும் பக்கத்தை தொடங்கியுள்ளார்.
பெல்லாமியின் குடும்பத்தினர் தரையில் இருந்தபடி அவருக்கு நடந்ததை பார்த்துள்ளனர், ஆனால் அவர்களும் தாக்குதலுக்கு உள்ளானதால் அவரை காப்பாற்ற முயற்சி செய்ய முடியவில்லை.
பெல்லாமி சுமார் 30 தேனீக்களையும் உட்கொண்டதாகவும், அதை அகற்ற மருத்துவர்கள் ஒரு நாளுக்கு மேல் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, அவர் முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அவரது தாயார் ஷவ்னா கார்ட்டர் கூறியுள்ளார்.
GoFundMe