சாட் ஜிபிடி உதவியுடன் வீட்டை விற்று ஒரு லட்சம் டொலர் லாபம் ஈட்டிய நபர்
சாட் ஜிபிடி உதவியுடன் வீட்டை விற்பனை செய்த நபர் ஒரு லட்சம் டொலர் லாபம் ஈட்டியுள்ளார்.
சாட் ஜிபிடி உதவியுடன் வீடு விற்பனை
பொதுவாக வீட்டை ஒருவர் விற்க திட்டமிட்டதால், அவர் இடைத்தரகரை அணுகுவார். இடைதரகர் வீடு வாங்க திட்டமிடுபவர்களின் அதை தெரிவித்து, வீட்டை விற்க உதவுவார். அதற்கு குறிப்பிட்ட தொகையை இடைத்தரகர் கமிஷனாக பெற்றுக்கொள்வார்.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சாட் ஜிபிடி உதவியின் மூலம், தனது வீட்டை ஒரு மில்லியன் டொலருக்கு விற்பனை செய்துள்ளார்.

மியாமியைச் சேர்ந்த ராபர்ட் லெவினும் அவரது மனைவியும் புளோரிடாவிலிருந்து வட கரோலினாவிற்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, கூப்பர் சிட்டியில் உள்ள அவர்களது வீட்டை விற்பனை செய்யும் செயல்முறை குறித்து சாட்ஜிபிடியிடம் (ChatGPT) சில அடிப்படை கேள்விகளைக் கேட்டனர்.
அதன் பின்னர் அந்த விசாரணை தீவிரமான நிலையில், ராபர்ட் லெவின் தனது வீட்டை விற்கும் செயல்முறையை முழுவதும் சாட் ஜிபிடி உதவியின் மூலம் முடிக்க முடியுமா என சோதனை செய்துள்ளார்.

வீட்டின் சில அறைகளுக்கு வண்ணம் பூசுவதன் மூலம், வீட்டின் மதிப்பு அதிகரிக்கும் என சாட் ஜிபிடி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சில அறைகளுக்கு வண்ணம் பூசியுள்ளனர்.
ஒரு லட்சம் டொலர் அதிகம்
வீட்டிற்கான விலை நிர்ணயம் செய்வது தொடங்கி, இணையத்தில் எங்கே இதனை பட்டியலிட வேண்டும், அதற்கான உள்ளடக்கங்கள், எப்படி சந்தைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தகவல்களை வழங்கியுள்ளது.

சாட் ஜிபிடியின் அறிவுறுத்தலின் படி, லெவின் செயல்பட்ட நிலையில், அந்த வீட்டை பார்வையிட 15 பேர் முன்வந்துள்ளனர். அதில் 5 பேர் வாங்க முன்வந்தனர்.
5 நாட்களிலே அந்த வீட்டை ஒரு மில்லியன் டொலருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த தொகையானது இடைத்தரகர்கள் கூறிய தொகையை விட ஒரு லட்சம் டொலர் அதிகம் ஆகும்.
மேலும், இதன் மூலம் இடைத்தரகர்களுக்கு வழங்கவேண்டிய கமிஷன் தொகையை சேமித்துள்ளார். அதேவேளையில், பத்திரப்பதிவுக்கு வழக்கறிஞர்களின் உதவியை நாடியதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |