பெட்ரோல் நிரப்ப சென்றவருக்கு கிடைத்த பில்லியன் டொலர் பரிசு
லொட்டரி வாங்கியே பலரும் பணத்தை இழந்தாலும், சிலருக்கு லொட்டரி மூலம் கிடைக்கும் அதிர்ஷ்டம் ஒரே நாளில் அவர்களை கோடீஸ்வரர்களாக்கி விடும்.
அதே போல், அமெரிக்காவை சேர்ந்த இருவர், அமெரிக்க லொட்டரி வரலாற்றில் 2வது பெரிய பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.
1.79 பில்லியன் டொலர் லொட்டரி
3 மாதங்களாக கோரப்படாமல் இருந்த 1.79 பில்லியன் டொலர் லொட்டரியை, அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் மிசோரியை சேர்ந்த இருவர் வென்றுள்ளனர்.
டெக்சாஸின் ஃபிரெட்ரிக்ஸ்பர்க் நகரில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த நபர், அங்கு விற்கப்பட்ட லொட்டரியை வாங்கியுள்ளார்.மற்றொரு நபர் மிசோரியில் வாங்கியுள்ளார்.
இதில், 1.79 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.15,763 கோடி) பரிசு கிடைத்துள்ளது. இந்த பவர்பால் லொட்டரியை, இருவரும் தலா ஆண்டுக்கு 895 மில்லியன் டொலர்களையோ அல்லது மொத்தமாக 410.3 மில்லியன் டொலர்களாகவோ பெற தேர்வு செய்யலாம்.
டெக்சாஸ் மற்றும் மிசோரியில், லொட்டரி வென்றவர்கள் தங்கள் அடையாளத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. இதன் காரணமாக வென்றவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில், எட்வின் காஸ்ட்ரோ என்பவர், அதிகபட்ச பவர்பால் லொட்டரி பரிசாக 2.04 பில்லியன் டொலர் வென்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த எரிபொருள் நிலைய மேலாளர், "எங்கள் நிலையத்தில் விற்கப்படும் லொட்டரி பரிசு வெல்லும் என யாரும் நம்புவதில்லை. இப்போது வென்று விட்டது.
பரிசு மதிப்பு உயர்ந்துள்ளதால், பலரும் லொட்டரி வாங்க வருகின்றனர். இதனால் எங்கள் வணிகம் செழித்துள்ளது"என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |