அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள்: சுவிட்சர்லாந்தின் மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன?
There are some developments that happened in Switzerland immediately after the US election results: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, சுவிட்சர்லாந்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையும் பெற்றுவிட்டது.
விடயம் என்னவென்றால், இன்னமும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப் சட்ட மாற்றங்களைச் செய்யமுடியும் என்பதையும் மறுக்கமுடியாது.
ட்ரம்ப் கட்சியின் தோல்வியின் தாக்கம்அமெரிக்காவில் முதலில் உணரப்பட்டது என்பது உண்மைதான்.
அதே நேரத்தில், அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள ’அதிகார மாற்றம்’ சுவிட்சர்லாந்திலும் பல வகையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

சுவிட்சர்லாந்தின் மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்?
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, சுவிட்சர்லாந்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன.
முதல் விடயமாக சுவிஸ் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. என்றாலும், உங்கள் பணம் சுவிஸ் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்குமானால், நீங்கள் கவலைப்படவேண்டாம், சுவிஸ் பங்குச் சந்தை ஆரம்பத்தில் வீழ்ச்சியை சந்தித்தாலும், இப்போது நிலைத்தன்மை அடைவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
முக்கிய விடயம் என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையும் கீழவையும் ஜனநாயகக் கட்சியினர் வசம் வந்துவிட்டதால், சுவிஸ் ஏற்றுமதி தொடர்பான பொருளாதாரத்தில் ட்ரம்ப் தன் கொள்கைகள், வரிகள் மூலம், தன் இஷ்டத்துக்கு தலையிடமுடியாது.
ஆக, பங்குச் சந்தை மற்றும் வர்த்தகத்தைப் பொருத்தவரை, ட்ரம்பின் தோல்வியால் மோசமான பாதிப்புகள் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள்.