பிரித்தானிய விமானப்படை தளத்தில் ட்ரோன் ஊடுருவல் முயற்சி: பின்னணியில் ஈரான்?
US military stops Iranian drone incursion at uk base: பிரித்தானியாவின் விமானப்படை தளத்திற்கு அத்துமீறி நுழைய முயன்ற ஈரானிய ட்ரோன்களை தடுத்து நிறுத்தி இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய விமானப்படை தளத்தில் ட்ரோன் ஊடுருவல் முயற்சி
இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ராயல் விமானப்படை(RAF) லேக்கன்ஹீத் தளத்திற்கு மேலே அத்துமீறி நுழைந்த 6 ட்ரோன்களை வெற்றிகரமாக இடைமறித்து விரட்டியடித்ததாக அமெரிக்க படைகள் தெரிவித்துள்ளன.
ட்ரோன்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், அத்துமீறிய ட்ரோன்களின் செயலுக்கு பின்னணியில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அத்துமீறியதாக கூறப்படும் ட்ரோன்களில் ஒன்றை கூட ராணுவத்தினரால் கைப்பற்ற முடியவில்லை.
முன்னதாக, கடந்த நவம்பர் 13ம் திகதி பிரித்தானியாவில் உள்ள இந்த ராணுவ தளத்தில் அனுமதியின்றி நுழைந்த மர்ம ட்ரோன்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வீரர்கள் உடனடியாக களமிறக்கப்பட்டதை அமெரிக்க விமானப்படை உறுதிபடுத்தியுள்ளது.