சிசிடிவியில் சிக்கிய மர்மமான வெளிறிய உருவம்! அமானுஷ்யம் என வைரலாகும் வீடியோ
அமெரிக்காவில் ஒரு வீட்டின் அருகே வெளிறிய மர்ம உருவம் இருப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி, Paranormality Magazine அதன் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. கென்டக்கியில் உள்ள மூர்ஹெட் அருகே வீடியோ படமாக்கப்பட்டது என்று அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது என்னவாக இருக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள அமானுஷ்ய ஆர்வலர்களிடையே இந்த வீடியோ விவாதத்தை கிளப்பியுள்ளது. மர்ம உருவம், ஹாலிவுட்டில் ஸ்பெக்ட்ரல் திரைப்படத்தில் நிறைய அழிவை ஏற்படுத்திய மனித உருவங்களை ஒத்திருக்கிறது
33 வினாடிகள் கொண்ட வீடியோவில் வெளிறிய, மனிதனைப் போன்ற உருவம் உள்ளது. இது ஒரு வீட்டின் பின் தோட்டத்திற்கு அருகில் நெளிந்து குனிந்தபடி நடந்தது செல்கிறது. வீட்டு உரிமையாளரின் காரை நெருங்கும் போது அது கவனமாக முன்னே நகர்ந்து சுற்றிப் பார்க்கிறது.
வீடியோ கிளிப்பின் ஆடியோவில், ஒரு நபர், "அவரது முகத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம்" என்று கூறுவது கேட்கிறது.
ஜூலை 9 அன்று "KY, Moorhead அருகே பாதுகாப்பு கேமராவில் சிக்கிய வெளிர் உயிரினத்தின் வீடியோ இதோ" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
Here's the video of the Pale creature caught on a security cam near Moorhead, KY. #cryptid pic.twitter.com/jCexxlQTA0
— Paranormality Magazine (@ParanormalityM) July 9, 2022
இந்த வீடியோ தற்போது, சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.