தன் நாட்டு போர் விமானம் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கா! குதித்து தப்பிய விமானிகள்..என்ன நடந்தது?
அமெரிக்காவைச் சேர்ந்த விமானத்தின் மீது அந்நாட்டு கப்பல் படையே துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
ரோந்து பணி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து வரும் சூழலில், ஹவுதி அமைப்பினர் வர்த்தக கப்பல்களை தாக்கி வருகின்றனர்.
இதனை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் அப்பகுதியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தில் செங்கடலுக்கு மேலே F/A-18 ரக போர் விமானம் பறந்தது. இதனை கவனித்த அமெரிக்க கடற்படை அந்த விமானத்தின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது.
உயிர் தப்பிய விமானிகள்
தாக்குதலின்போது இருவரும் விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினர். அதன் பின்னர் குறித்த போர் விமானம் அமெரிக்காவுடையது என்று தெரிய வந்தது.
மேலும், இச்சம்பவத்தில் இரண்டு விமானிகளின் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய படை வெளியிட்ட செய்தி குறிப்பில், அமெரிக்க போர் விமானம் பறந்தபோது அதனை தவறுதலாக, அமெரிக்க கப்பலில் இருந்தவர்கள் சுட்டுள்ளனர். எனினும், நட்பு ரீதியாக சுடப்பட்ட விவகாரம் என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |