இறந்தவர்களை உயிருடன் கொண்டுவரும் முயற்சி., மனித உடல்களை பதப்படுத்திவைக்கும் அமெரிக்க நிறுவனம்!
இதுவரை 199 மனித தலைகள் மற்றும் உடல்களை உறையவைத்து பதப்படுத்தி வைத்துள்ளனர்.
எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் புத்துயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் கிரையோபிசர்வ் முறையில் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேலில் உள்ள Alcor Life Extension Foundation எனும் என்ஜிஓ நிறுவனம், திரவ நைட்ரஜனால் நிரப்பப்பட்ட தொட்டிகளுக்குள் 199 மனிதர்களின் உடல்கள் மற்றும் தலைகளை பதப்படுத்தி வைத்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உடல்களின் உயிரிமயாளர்கள், எதிர்காலத்தில் விஞ்ஞானம் இன்றைய திறனைத் தாண்டி முன்னேறியிருக்கும் போது புத்துயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் கிரையோபிசர்வ் (cryopreserve) என்ற இந்த முறையை தேர்வு செய்துள்ளனர்.
Image: Gamma-Rapho via Getty Images
Cryopreservation என்பது திரவ நைட்ரோஜன் (Liquid Nitrogen) நிரப்பப்பட்ட தொட்டிகளில் மனித உடல்களை உறையவைத்து பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகும்.
பதப்படுத்தப்பட்டுள்ள மனித உடல்களில் பெரும்பாலானவை கடுமையான புற்றுநோய் அல்லது சிகிச்சைவழி தீர்க்கமுடியாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் என்று Alcor Life Extension Foundation கூறுகிறது.
2 வயது சிறுமி
உறைய வைக்கப்பட்ட உடல்களில் ஆக இளவயதுடையது Matheryn Naovaratpong என்ற தாய்லாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுமியின் உடலாகும்.
BBC/Reuters
மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்தச் சிறுமி 2015-ஆம் ஆண்டு cryopreservation முறையின்கீழ் உறையவைக்கப்பட்டார்.
அவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள், தங்கள் மகளுக்கு பல மூளை அறுவை சிகிச்சைகள் செய்தும், துரதிர்ஷ்டவசமாக எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் அவர்கள் தங்களை அணிகியதாக Alcor கூறுகிறது.
பிட்காயின் வர்த்தகரான Hal Finney-யும் தானே முன்வந்து தனது தலை பதப்படுத்தியுள்ளார். அவர் 2014-ல் ALS நோயால் இறந்த பிறகு உறையவைக்கப்பட்டுள்ளார்.
Cryopreservation எவ்வாறு செயல்படுகிறது?
இறந்ததாக உறுதிசெய்யப்படும் நபரின் உடலிலிருந்து ரத்தமும் இதர திரவங்களும் வெளியேற்றப்பட்டு உடல் கெட்டுப்போகாமல் இருக்க தகுந்த இரசாயனங்கள் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. பிறகு திரவ நைட்ரோஜன் நிரப்பப்பட்ட தொட்டியில் உடல் உறையவைக்கப்படுகிறது.
அவ்வாறு செய்ய ஓர் உடலுக்குக் குறைந்தபட்ச செலவு 20,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூ. 73 லட்சம்) ஆகும்.
மூளையை மட்டும் உறையவைக்க 80,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூ. 2.93 கோடி) செலவாகும் என அமைப்பு தெரிவித்தது.
இந்த அமைப்பின்கீழ் இப்போது உயிருடன் இருக்கும் 1,400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர், அதுமட்டுமின்றி அவர் அந்த நிறுவனத்துக்கு கொடுக்கவேண்டிய பணத்தை அதற்கு ஈடான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதில் அந்நிறுவனத்தையே பயனாளியாக (beneficiary) பதிவிட்டு அதன் மூலம் பணம் செலுத்துகிறார்கள்.
Image: Alcor Life Extension Foundation - ஒவ்வொரு சிலிண்டரிலும் ஒவ்வொரு உடல்