அமெரிக்காவில் அணுமின் நிலையத்தில் கசிந்த 4 லட்சம் கேலன்கள் கதிரியக்க நீர்: பொதுமக்கள் அவசர அறிவிப்பு
அமெரிக்காவில் உள்ள அணுமின் நிலையத்தில் இருந்து 4,00,000 கேலன்கள் டிரிடியம் கதிரியக்க நீர் கசிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதிரியக்க நீர் கசிவு
அமெரிக்காவின் மினசோட்டா அணுமின் நிலையத்தில்(Minnesota nuclear power plant) இருந்து கடந்த நவம்பர் மாதம் குறைந்தது 4,00,000 கேலன்கள் கதிரியக்க நீர் வெளியேறியுள்ளது. ஆனால் இந்த கசிவு தொடர்பான தகவல் வியாழக்கிழமை அன்று வெளியே தெரியவந்துள்ளது.
இதையடுத்து மினசோட்டாவில் உள்ள கதிரியக்க கட்டுப்பாட்டாளர்கள், கசிவு தொடர்பான தகவலை பொதுமக்களுக்கு உடனடியாக அறிவித்துள்ளனர், அத்துடன் அணுசக்தி வசதியை சுத்தம் செய்வதையும் கண்காணித்து வருவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
AP
மினியாபோலிஸ்(Minneapolis) மாநிலத்தின் மிகப்பெரிய நகரில், மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே சுமார் 56 கி மீ தொலைவில் மினசோட்டா அணுமின் நிலையம் அமைந்துள்ளது என்றும், மிசிசிப்பி நதி இந்த கசிவால் பாதிக்கப்படவில்லை என்றும் மின்னசோட்டா சுகாதாரத் துறையை மேற்கோள் காட்டி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வியாழக்கிழமை வெளியான அறிக்கை ஒன்றில், அணு ஆலையின் கசிவை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சமூகத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆபத்து ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Twitter
கசிந்த டிரிடியம்
இந்த எதிர்பாராத விபத்து மூலம் கசிந்த டிரிடியம், அணு உலை நடவடிக்கைகளின் ஒரு பொதுவான துணை தயாரிப்பாகும்.
பெடரல் நியூக்ளியர் ரெகுலேட்டரி கமிஷன் கூற்றுப்படி, டிரிடியம் என்பது இயற்கையாக நிகழும் ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பு ஆகும்.
KSTP
இவை பலவீனமான பீட்டா கதிர்வீச்சை உருவாக்குகிறது, இது மனித தோலில் ஊடுருவாது மற்றும் காற்றில் அதிக தூரம் செல்லாது, அதே சமயம் இந்த டிரிடியம் கசிவுகள் எப்போதாவது அணுசக்தி வசதிகளில் நிகழ்கின்றன என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது அரிதாகவே பொது பாதுகாப்பு அல்லது ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகின்றன.