பரிசுத்தொகையை கேட்டதும் மயக்கம் வந்தது - 40 வருடமாக லொட்டரி வாங்கிய முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
லொட்டரி வாங்கிய பலர் அதில் பணத்தை இழந்தாலும், திடீரென கிடைக்கும் அதிர்ஷ்டம் மூலம் பலரும் கோடீஸ்வரர்களாக மாறி விடுகிறார்கள்.
அதே போல், அமெரிக்காவை சேர்ந்த முதியவருக்கு கிடைத்த லொட்டரி பரிசு மூலம், ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி விட்டார்.
40 வருடமாக லொட்டரி
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள மேகோம்ப் கவுண்டியை சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர், தனது 20 வயதில் தொடங்கி, 40 வருடங்களாக தொடர்ந்து லொட்டரி வாங்கி வந்துள்ளார்.
ஆனால் ஒருமுறை கூட பரிசு வெல்லவில்லை. லொட்டரி வாங்கிய பணத்தை சேமித்திருந்தால், லொட்டரி பரிசை விட பெரிய தொகை கையில் இருந்திருக்கும் என பலரும் அறிவுரை கூறி வந்தனர்.
ஆனால், அவர் மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தாமல், தொடர்ந்து லொட்டரி வாங்கி வந்துள்ளார்.
ரூ.51 கோடி
சமீபத்தில், ஸ்கார்ட்ச் ஆப் லொட்டரி வாங்கிய அவருக்கு, அதன் மூலம் 6 மில்லியன் அமெரிக்கா டொலர்(இந்திய மதிப்பில் ரூ.51 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து பேசிய அந்த முதியவர் "நான் லொட்டரி சீட்டை Scratch செய்தபோது 6 மில்லியன் டாலர்கள் வென்றதைக் கண்டபோது, மயக்கம் வருவது போல் இருந்தது.
நான் பார்ப்பதை நம்பாததால், அதை மீண்டும் மீண்டும் சரிபார்க்க லொட்டரி செயலியில் அதை ஸ்கேன் செய்ய வேண்டியிருந்தது. இந்த பணத்தில் சுற்றுலா சென்று விட்டு மீதமுள்ள பணத்தை சேமிக்க போகிறேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |