அமெரிக்க ஓபன் டென்னிஸ்... உலகின் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சியளித்த இளம் வீரர்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விளையாடினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி விளையாடிய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை மெட்வடேவ் பெற்றுள்ளார்.
25 வயதான மெட்வடேவ் இந்த ஆண்டு மார்ச் 15 முதல் தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் உலகின் 2ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.