இந்தியா கனடா விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்: இந்தியா பதிலடி
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் உருவாகியுள்ள மோதலை பயன்படுத்திக்கொள்ள முயன்ற ஒரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா கனடா மோதல்
பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மூக்கை நுழைக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்
இந்நிலையில், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தியா மீது வெறுப்பைக் காட்டுபவரான இலான் ஓமர் ( Ilhan Omar) என்னும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர், தேவையில்லாமல் கனடா இந்திய விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ளார்.
சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் புகலிடம் கோரி, குடியுரிமை பெற்று, அமெரிக்க அரசியலில் நுழைந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் சோமாலி அமெரிக்கர், மின்னசோட்டாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினப்பெண் மற்றும் முதல் இஸ்லாமிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்னும் பெருமைகள் கொண்டவர் இலான் ஓமர்.
இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருபவரான இலான் ஓமர், நிஜ்ஜர் படுகொலையில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கூறப்படும் விடயம் தொடர்பில் கனடா துவங்கியுள்ள விசாரணைக்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவிலும் அத்தகைய செயல்கள் ஏதாவது நடந்துள்ளனவா என்பது குறித்து விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ட்விட்டர் அல்லது எக்சில் வெளியிட்ட இடுகை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Sit down Madam Representative.
— Priyanka Chaturvedi?? (@priyankac19) September 27, 2023
Such be the case, as an Indian Parliamentarian I urge @MEAIndia to start an enquiry into how an elected representative in USA is interfering in the peace of Jammu&Kashmir via Pakistan funded PoK visit. https://t.co/cYV08xt0sD
இந்தியா சுடச்சுட பதிலடி
இலான் ஓமரின் கருத்துக்கு, சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி (Priyanka Chaturvedi).
இலாம் ஓமரின் இடுகைக்கு பதிலளித்துள்ள பிரியங்கா, பேசாமல் உட்காருங்கள் பிரதிநிதி அம்மையார் அவர்களே, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில், நானும், பகிஸ்தானின் நிதி உதவி பெற்று பாகிஸ்தான் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எப்படி ஜம்மு காஷ்மீரின் அமைதியில் தலையிடலாம் என விசாரணை மேற்கொள்ளுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த இலான் ஓமர் 2022ஆம் ஆண்டு, பாகிஸ்தான் சென்று, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களான ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்ததுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள முஸாஃபர்பாதுக்கும் சென்றிருந்தார். குறுகிய மனப்பான்மையுடைய அரசியல் என இந்தியா அதை விமர்சித்திருந்தது.
இந்நிலையில், இலான் ஓமர் பாகிஸ்தான் சென்றபோது, அவரது உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு ஸ்பான்சர் செய்தது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
ஆக, சம்பந்தமில்லாத ஒரு விடயத்தில் தலையிட்டு இலான் ஓமர் விசாரணை கோரும் நிலையில், ஒரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி பாகிஸ்தான் செலவில் இந்திய விவகாரங்களில் தலையிடலாம் என இந்திய அரசு விசாரணை துவங்கலாமே என்றுதான் கூறியுள்ளார் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |