ட்ரம்பால் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகின்றது.
உள்துறை அலுவலக தரவுகள் கூறும் தகவல்
கடந்த நவம்பரில் அமெரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற்றதுமே, பிரித்தானிய குடியுரிமை பெறுவது தொடர்பில் இணையத்தில் தேடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாகத் தெரிவிக்கிறார், புலம்பெயர்தல் ஆலோசனை சேவைகள் மையத்தின் இயக்குநரான Ono Okeregha என்பவர்.
இதுவரை இல்லாத வகையில், பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதாக பிரித்தானிய உள்துறை அலுவலகமும் தெரிவித்துள்ளது.
உள்துறை அலுவலக தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் 6,100க்கும் அதிகமான அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
குறிப்பாக, கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டுமே, அதாவது, ட்ரம்ப் ஜனாதிபதியாகலாம் என்னும் நிலை உருவான நேரத்தில், பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பித்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில், சுமார் 1,700 அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பித்ததாக பிரித்தானிய உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சொல்லப்போனால், ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியதுமே, அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமை பெறுவதில் தீவிரமாக ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டார்கள் என்கிறார் சட்ட ஆலோசனை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த Elena Hinchin என்பவர்.
அதாவது, அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமை பெறுவதில் அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழல் முக்கிய காரணமாக அமைந்துள்ளதை தெளிவாகக் காணமுடிகிறது என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |