வேலைக்கு செல்லாமல் குழந்தையை கவனிக்கும் பெற்றோருக்கு ரூ.8.5 லட்சம் - அமெரிக்கா திட்டம்
us plans to give stipend for parents to stay at home for baby care: வீட்டிலிருந்து குழந்தைகளை கவனிக்கும் பெற்றோரில் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் மானியம் வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
குழந்தையை கவனிக்கும் பெற்றோருக்கு மானியம்
தற்போதைய காலகட்ட்டதில் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்களில் இருவருமே வேலைக்கு செல்கின்றனர்.
ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது குழந்தையை பராமரிப்பதற்காக இருவரில் ஒருவர் வீட்டில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒரு சிலர் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பகல் நேர பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், பெற்றோரில் ஒருவர் குழந்தை பராமரிப்புக்காக வீட்டில் இருப்பதால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டும் வகையில், மானியம் வழங்கும் திட்டத்தை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
முன்மொழியப்பட்ட இந்த மானியமானது, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையால் நடத்தப்படும் 12 பில்லியன் டொலர் திட்டமான குழந்தை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு நிதியிலிருந்து (CCDF) பெறப்படும்.
1990களில் அமைக்கப்பட்ட இந்த நிதியானது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து வேலை செய்யவும், படிக்கவும், வேலைப் பயிற்சியை முடிக்கவும் உதவும் வகையில், வெளி குழந்தை பராமரிப்புக்கான செலவைச் சமாளிக்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த நிதி, தற்போது சுமார் 13 லட்சம் குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் சுமார் 9,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 8.5 லட்சம்) வழங்கப்படுகிறது.
தற்போதைய புதிய முன்மொழிவில் இந்த திட்டத்தின் கீழ் நிதியை பெற சில குறிப்பிட விதிமுறைகள் உள்ளது.
பெற்றோர் திருமணமானவர்களாக இருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் வீட்டில் தங்கி குழந்தையைப் பராமரிக்க வேண்டும். மற்றொருவர் வாரத்திற்கு குறைந்தபட்சம் 35 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.
குடும்ப வருமானம் பொதுவாக மாநிலத்தின் சராசரி வருமானத்தில் 85% க்கும் குறைவாக இருக்க வேண்டும், இருப்பினும் சில மாநிலங்கள் 60% என்ற குறைந்த வரம்பைப் பயன்படுத்துகின்றன.
பெற்றோரில் ஒருவர் வீட்டில் தங்கும் திருமணமாகாத தம்பதிகள் மற்றும் வேலை செய்யாத ஒற்றைப் பெற்றோர் இந்த முன்மொழிவின் கீழ் தகுதி பெற மாட்டார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |