போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் இறங்கிய விமானம்: பலர் காயம்
அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையின் நடுவில் இறங்கியுள்ளது.
சாலையில் இறங்கிய விமானம்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள Gainesville என்னுமிடத்தில், நேற்று திடீரென விமானம் ஒன்று சாலை ஒன்றில் அவசரமாக தரையிறங்கியது.
#BREAKING : Video shows the moments a small plane on a training flight made an emergency crash landing on a busy street in Gainesville, Georgia.#Georgia #Gainesville #emergency #crash #landing #Plane #street pic.twitter.com/4XfzFDVFip
— mishikasingh (@mishika_singh) February 10, 2026
அப்போது அந்த விமானம் பல வாகனங்கள் மீது மோதியதில், வாகனங்களிலிருந்த பலர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Gainesvilleஇலுள்ள விமான நிலையத்தில் விமானத்தை இறக்க விமானி திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென விமான எஞ்சின் பழுதானதால், விமான நிலையத்தை அடைய இயலாமல் சாலையிலேயே விமானத்தை இறக்க நேர்ந்துள்ளது.

இந்நிலையில், அந்த விமானம் சாலையில் இறங்குவதைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |